ஆகஸ்ட் 23, மான்செஸ்டர் (Sports News): இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் (Sri Lanka Tour Of England 2024) மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், இங்கிலாந்து-இலங்கை (ENG Vs SL) அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் (Manchester) நகரில் நடைபெற்று வருகிறது. இதன், முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 74 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 74, மிலன் ரத்னாயகே 72 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஷோயிப் பஷிர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். Neeraj Chopra In Diamond League 2024: டைமண்ட் லீக் போட்டியில் 89.49 மீட்டர் பறந்த ஈட்டி.. வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா..!
இதனையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 22, லாரன்ஸ் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர், நேற்று 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. பென் டக்கெட் 18, கேப்டன் ஆலி போப் 6, லாரன்ஸ் 30, ஜோ ரூட் 42, ஹாரி புரூக் 56 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், 61 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 259 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜேமி ஸ்மித் 72, அட்கின்சன் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து அணி 23 முன்னிலை வகிக்கிறது. இன்று 3-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.