ஆகஸ்ட் 23, லோசான் (Sports News): பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிடம் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்தது இந்திய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒலிம்பிக் தொடர் முடிவடைந்த 2 வாரத்திற்குள், சுவிட்சர்லாந்தின் லோசான் (Lausanne) நகரில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் (Diamond League 2024) தொடரில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். Ultimate Table Tennis 2024: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர்.. சென்னையில் இன்று தொடக்கம்..!
இதில், நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் 82.10 மீட்டர் தூரம் ஈட்டியை (Javelin Throw) எறிந்தார். பின்னர் கிடைத்த 2-வது வாய்ப்பில் 83.21 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 4-வது இடத்தில் இருந்தார். அடுத்த 3-வது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 83.13 மீட்டர் தூரம் மட்டுமே வீசினார். ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.49 மீட்டர் தூரம் வீசி முதலிடத்திலும், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 87.08 மீட்டர் தூரம் வீசி 2-வது இடத்திலும், உக்ரைனைச் சேர்ந்த ஆர்தர் 83.38 மீட்டர் தூரம் வீசி 3-வது இடத்தில் இருந்தனர். இதனைத்தொடர்ந்து 4-வது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 82.34 மீட்டர் தூரம் மட்டும் வீசியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 5-வது வாய்ப்பில் 85.58 மீட்டர் தூரம் வீசி டாப் 3 இடங்களுக்குள் சென்றார்.
இதனைத் தொடர்ந்து கடைசி வாய்ப்பில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஆச்சரியம் கொடுத்தார். இதனால், நீரஜ் சோப்ரா தனது கடைசி வாய்ப்பில் 90 மீட்டர் தூரத்தை எட்டி பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், கடைசி வாய்ப்பில் நீரஜ் சோப்ரா வீசிய ஈட்டி 89.49 மீட்டர் தூரம் சென்றது. இதன் மூலமாக டைமண்ட் லீக் தொடரிலும் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் (Silver Medal) வென்று சாதனை படைத்தார். தங்கப் பதக்கத்தை ஆண்டர்சன் பீட்டர்ஸ் கைப்பற்றினார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் வெண்கலம் வென்று அசத்தினார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆஸ்ட்ராவா லீக் தொடருக்குப்பின் நீரஜ் சோப்ரா பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் டாப் 3-யில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
CLUTCH NEERAJ, CLUTCH! He brings out a season's best of 89.49m to clinch the second spot 🔥
What a phenomenal final attempt, uff 🤌🏽🥹#NeerajChopra #DiamondLeague pic.twitter.com/zvM0AI8wzX
— Tejas (@Raita_failao) August 22, 2024