செப்டம்பர் 11, மான்செஸ்டர் (Sports News): தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து, முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி டிஎல்எஸ் விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா (ENG Vs SA) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி, நாளை (செப்டம்பர் 12) மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்கும். IND Vs UAE: 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. அதிரடியால் ஆட்டத்தை முடித்த இந்தியா..!
இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (England Vs South Africa):
ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 26 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து அணி 12 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவில்லை. முதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு பதிலடி தரும் வகையில் இங்கிலாந்து அணி களமிறங்கும். அதே வேளையில், தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்ற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல், ஹாரி புரூக் (கேப்டன்), சாம் கரன், டாம் பான்டன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், லூக் வுட், ரெஹான் அகமது, பிரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஸ்மித்.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:
ஐடன் மார்க்ரம், கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், டோனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், க்வேனா மபாகா, டேவிட் மில்லர், செனுரன் முத்துசாமி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ்.