செப்டம்பர் 01, லீட்ஸ் (Sports News): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா (ENG Vs SA) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (செப்டம்பர் 02) லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது. UAE Vs AFG: ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்டிங்.. யுஏஇ வெற்றி பெற 189 ரன்கள் இலக்கு..!
இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (England Vs South Africa):
ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 71 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து அணி 30 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க அணி 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 1 போட்டிக்கு முடிவில்லை. இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரை பேன்கோட் செயலி மூலம் நேரலையில் பார்க்கலாம்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சோனி பேக்கர்.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:
ஐடன் மார்க்ரம், ரியான் ரிகெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரெவிஸ், வியான் முல்டர், கார்பின் போஷ், கேஷவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி.