Indian Cricket Team (Photo Credit: @CricCrazyJohns X)

செப்டம்பர் 23, சென்னை (Sports News): உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship) புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சென்னை, சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 25 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. சேப்பாக்கம் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் (World Test Championship Points Table 2023-2025) 86 புள்ளிகள் மற்றும் 71.67 சதவீதத்துடன் இந்தியா (Indian Cricket Team) முதலிடத்தில் நீடிக்கிறது. 62.50 சதவீதத்துடன் 2-ஆம் இடத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 9.17 சதவீதம் முன்னிலை பெற்றுள்ளது. Chess Olympiad 2024: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று மகுடம் சூடியது இந்தியா: ஆண்கள் & பெண்கள் அணி வரலாற்று சாதனை.!

இந்திய அணிக்கு அடுத்தடுத்து உள்ள டெஸ்ட் தொடர்கள் மிக முக்கியமானதாகும். இதில் சிறந்து விளங்கினால் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம். இதுவரை 2 முறை நடைபெற்றுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடி உள்ளது.

புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் இலங்கை, நான்காவதாக நியூஸிலாந்து, இங்கிலாந்து 5-வது இடத்திலும், 6-வது இடத்தில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் 2023-2025: