மே 15, சென்னை (Chennai): தடகள போட்டியின் தேர்வு முறையை தமிழ்நாடு அரசு (Tamil Nadu government) டிஜிட்டல் மயமாக்க முடிவு (Athletic competition digital-centric) செய்துள்ளது. நாட்டிலேயே, தமிழ்நாட்டில் முதல்முறையாக டிஜிட்டல் தேர்வு முறை அறிமுகமாக உள்ளது. தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களின் பதிவு மற்றும் தரவரிசையின் துல்லியத்தை உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Rural Agriculture Training: கிராமப்புற வேளாண்மை பயிற்சி.. விதை உரக்கட்டு தொழில்நுட்பம் பற்றி விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்..!

மேலும் டிஜிட்டல் முறையில் வெளிப்படைத் தன்மை மேம்படுத்தப்படுவதோடு, விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறன் அளவீடுகளை ஒப்பீடு செய்து கொள்ளவும் உதவும், இந்த முயற்சியில் விளையாட்டு வீரர்களின் தரவுகள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படுவதால் வீரர்களும் உடனுக்குடன் தங்கள் மதிப்பீட்டை அறிய முடியும் எனத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.