மே 12, இலண்டன் (Cricket News): இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் க்ரேமே பீட்டர் ஸ்வான் (Graeme Peter Swann). இவர் கடந்த காலங்களில் இங்கிலாந்து (England Cricket Team) அணிக்காக பல சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் அவர், "சஞ்சு சாம்சன் (Sanju Samson) இளம் தோனியை (Mahendra Singh Dhoni) போல செயல்படுகிறார். அவரை போலவே அமைதியாக இருக்கிறார். அவர் தோணி போல இருக்கிறார்" என தெரிவித்தார். இவரது கருத்துக்கள் எம்.எஸ் தோனி மற்றும் சஞ்சு சாம்சன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது ஐ.பி.எல் 2023 (IPL 2023) போட்டித்தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. 74 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. போட்டி இம்மாத இறுதியில் மொத்தமாக நிறைவு பெறுகிறது. WhatsApp Spam Calls: வெளிநாட்டு நம்பரில் அழைத்து வாட்ஸப்பில் புதிய வகை மோசடி; இந்தியர்களை பதறவைத்த சம்பவம்.. நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..!
இதில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக தற்போது பணியாற்றி வருகிறார். அவரின் தலைமையிலான அணி சிறப்பாக விளையாடி வருகிறது. சஞ்சு சாம்சனும் ஒவ்வொரு போட்டியிலும் வியக்கத்தகு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இத்தகைய நிலையில் தான் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர் சஞ்சுவை பாராட்டியுள்ளார்.