No Indian Flag at Karachi Stadium (Photo Credit: @ItsTalhaqureshi X)

பிப்ரவரி 17, கராச்சி (Sports News): ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் (ICC Champions Trophy 2025) எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில், டாப் 8 இடங்களை பிடிக்கும் அணி இந்த தொடரில் பங்கு பெறுகிறது. குரூப் 'ஏ' பிரிவில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளும், குரூப் 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. DC Vs RCB Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக்: இன்று டெல்லி - பெங்களூர் அணிகள் மோதல்.. நேரலை, நேரம் குறித்த விபரம் இதோ.!

இந்தியாவின் தேசியக்கொடி இல்லை:

இந்நிலையில், பாதுகாப்பு காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்துவிட்டது. இதனால், இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது. மேலும், இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றால், துபாயில் தான் இறுதிப் போட்டி நடைபெறும். இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் லாகூர் மைதானங்கள் தயாராக உள்ளன. ஐசிசி தொடரில் ஒவ்வொரு அணியின் தேசியக்கொடியும் மைதானத்தில் பறக்க விடப்படுவது வழக்கம். அந்தவகையில், கராச்சியில் உள்ள மைதானத்தில் ஏழு நாடுகளின் கொடி மட்டும்தான் பறக்க விடப்பட்டிருக்கிறது. இதில், இந்தியாவின் தேசியக்கொடி இல்லை (No Indian Flag) என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி விளக்கம்:

இதற்கு விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், பாகிஸ்தானில் வந்து விளையாடும் நாடுகளின் கொடிகள் மட்டும் தான் பறக்க விடப்பட்டிருப்பதாகவும், இந்தியா தங்களது நாட்டுக்கு வரவில்லை என்பதால், இந்திய நாட்டின் தேசிய கொடியை தாங்கள் வைக்கவில்லை என்றும் விளக்கமளித்து உள்ளார். ஏற்கனவே, பாகிஸ்தான் என்ற பெயரை தங்களது ஜெர்சியில் போடமாட்டோம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது பாகிஸ்தானும் இந்தியாவின் தேசிய கொடியை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இதோ: