Pakistan name on Indian Team Jersey (Photo Credit: @ICC X)

பிப்ரவரி 18, மும்பை (Sports News): சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் (ICC Champions Trophy 2025) தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை போட்டித் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, முகமது சமி ஆகியோர் ஜெர்சி அணிந்திருக்கும் போட்டோக்கள் ஐசிசி எக்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. Team India New Jersey: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025: இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தல் ஜெர்சி.!

இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர்:

இந்திய அணி வீரர்கள் அணிந்திருக்கும் ஜெர்சியில் (Team India New Jersey) பாகிஸ்தான் என்ற பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. முதலில் பாகிஸ்தான் இலச்சினையை போட இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. தற்போது, பாகிஸ்தான் பெயர் பொறித்த ஜெர்சியை வீரர்கள் அணிந்துள்ளனர். முன்னதாக, இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என்று அறிவிக்கப்பட்ட தருணத்தில், அந்நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் இந்திய தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி வெளியிட்ட பதிவு: