ஜனவரி 24, டெல்லி (Sports News): முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் (Virender Sehwag), தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத் (Aarti Ahlawat) விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 20 ஆண்டுகள் திருமண வாழ்வை அவர்கள் முறித்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆர்யவீர் மற்றும் வேதாந்த் என இரு மகன்கள் உள்ளனர். IND Vs ENG 2nd T20I: இந்தியா - இங்கிலாந்து 2வது டி20; மைதானம், நேரம் மற்றும் நேரலை விவரம் இதோ..!
சேவாக் விவாகரத்து:
இந்நிலையில், அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் சமூக வலைதளங்களில் இருவரும் ஒருவரை, ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தி இருப்பதாகவும் முதற்கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளது. இருவரும் விரைவில் விவாகரத்துக்கு (Divorce) விண்ணப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் கடந்த 2024ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெளியிட்ட புகைப்படங்களில் அவரது மனைவி இடம் பெறவில்லை. அதற்கு முன்பு இருந்தே, அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.