IND Vs ENG 2nd T20I (Photo Credit: @toisports X)

ஜனவரி 24, சேப்பாக் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில், ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் (Eden Gardens) மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 (IND Vs ENG) போட்டியில், இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர், இலக்கை துரத்தி விளையாடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. Hardik Pandya: ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புதிய சாதனை.. பந்துவீச்சில் அபாரம்..!

நேரம் மற்றும் நேரலை விவரம்:

இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி சென்னையில் சேப்பாக் மைதானத்தில் நாளை (ஜனவரி 25) நடைபெறவுள்ளது. சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்தியா - இங்கிலாந்து தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல், இந்தியாவில் நேரலையில் ஒளிபரப்பு (India vs England Live Match) செய்கிறது. ஆன்லைனில் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.