ஜனவரி 27, கோலாலம்பூர் (Sports News): ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை (U19 Womens T20 WC 2025) கிரிக்கெட் போட்டி மலேசியாவில் (Malaysia) நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 18ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 02 தேதி முடிவடைகிறது. மொத்தம் 16 பணிகள் கலந்துகொண்டு, குரூப் ஏ, பி, சி, டி என குழுவுக்கு 4 அணிகள் வீதம் போட்டியிட்டன. இதில் குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் இரண்டு இடங்களை பிடித்த அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. Tata Steel Chess 2025: டாடா ஸ்டீல் செஸ் 2025; டிராவில் முடிந்த குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆட்டம்..!
மைதானம் மற்றும் நேரம்:
இந்த தொடரில் முதல் 7 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 8வது போட்டி, நாளை (ஜனவரி 28) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 8 மணிக்கு போட்டி தொடங்கும். யு 19 வங்கதேச மகளிர் அணி, யு 19 வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவல் (Bayuemas Oval) மைதானத்தில் நடைபெறுகிறது.