ஜனவரி 22, ஈடன் கார்டன் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று (ஜனவரி 22) தொடங்குகிறது. ஒருநள் தொடரானது பிப்ரவரி 06ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டி20:
இந்த டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டானாக சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) மற்றும் துணைக்கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமியும் (Mohammed Shami) இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து (IND Vs ENG T20) அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் (Eden Gardens) கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜனவரி 22) நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை, இடம், நேரம் மற்றும் நேரலை குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காண்போம். MS Dhoni: ஐபிஎல் 2025 போட்டிக்கு தயாராகும் தல தோனி; தீவிர பயிற்சி.. வைரல் க்ளிக்ஸ் லீக்.!
மைதானம் மற்றும் நேரம்:
- முதல் டி20: கொல்கத்தா - ஈடன் கார்டன்ஸ்
- இரண்டாவது டி20: சென்னை - எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்
- மூன்றாவது டி20: ராஜ்கோட் - சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்
- நான்காவது டி20: புனே - மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்
- ஐந்தாவது டி20: மும்பை - வான்கடே மைதானம்
- டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்.
நேரலையில் பார்ப்பது எப்படி?
இந்தியா - இங்கிலாந்து தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, இந்தியாவில் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.
டி20 தொடருக்கான இரு அணி வீரர்கள்:
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், ரெஹான் அகமது, பென் டக்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், மார்க் வுட்.