ஏப்ரல் 22, முல்லன்பூர் (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் (PBKS Vs GT) அணிகள் மோதின. இந்த ஆட்டம் சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. Google Doodle for Earth Day: “இன்னுயிர்யெல்லாம் இனிமையாய் வாழ்ந்திடும் என் மேனியில் பூமி..” பூமி தினத்தை முன்னிட்டு டூடுள் வெளியிட்ட கூகுள்..!

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடினர். பின்னர், குஜராத் வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35 ரன்கள் குவித்தார். குஜராத் அணியில் சாய் கிஷோர் 4 ஓவர்கள் பந்து வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி ரன்களை அடித்தனர். இருப்பினும், சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது. இறுதியில் விறுவிறுப்பாக சென்ற ஆட்டம் ராகுல் திவேத்தியாவின் அதிரடி ஆட்டத்தினால் குஜராத் அணி 19.1 ஓவர்களிலேயே 7 விக்கெட்கள் இழப்புடன் எளிதில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில், ராகுல் திவேத்தியா 18 பந்துகளில் 36 ரன்களை குவித்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை குஜராத் அணி வீரர் சாய் கிஷோர் பெற்றார்.