INDW Vs IREW 3rd ODI (Photo Credit: @CricinfoHindi X)

ஜனவரி 15, ராஜ்கோட் (Sports News): அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (INDW Vs IREW 3rd ODI) தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளும் ராஜ்கோட் (Rajkot) மைதானத்தில் நடைபெறுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும், இந்தியா 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. Nitish Kumar Reddy: முட்டிபோட்டு மலையேறும் இந்திய கிரிக்கெட் வீரர்; திருப்பதியில் பயபக்தியுடன் மனமுருகி வேண்டுதல் வழிபாடு.!

இந்தியா அதிரடி ஆட்டம்:

இந்நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி - அயர்லாந்து மகளிர் அணிகள் மோதும் போட்டி, இன்று (ஜனவரி 15) காலை 11 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா பவர்பிளே 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.

நேரடி ஒளிபரப்பு:

இந்திய மகளிர் மற்றும் அயர்லாந்து மகளிர் இடையேயான 3வது ஒருநாள் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் பார்க்கலாம். இந்தப் போட்டி இந்தியாவில் உள்ள டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரிலும் (Disney+ Hotstar) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.