Mitchell Santner & Mohammad Rizwan (Photo Credit: @mufaddal_vohra X / @Realsufiyan_M X)

பிப்ரவரி 18, கராச்சி (Sports News): ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டி, பாகிஸ்தானில் நடைபெறுகிறது. சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா என 8 கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் 15 ஆட்டத்தில், இறுதியாக வெற்றிபெறும் அணி ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஐ கையில் ஏந்தும்.

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி நேரலை பார்ப்பது எப்படி?

இந்த போட்டியில் இந்தியா தனது கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, பாகிஸ்தானில் உள்நாடு அளவில் நடைபெறும் பாதுகாப்பு படைக்கு எதிரான தாக்குதல் என பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய தேசிய கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ (BCCI) திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய் நாட்டில் நடைபெறுகிறது. இதனால் இந்திய அணி துபாய்க்கு சென்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நேரலையை (Where to Watch Champions Trophy 2025 Live) இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். Team India New Jersey: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025: இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தல் ஜெர்சி.! 

முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (Pakistan Cricket Team Vs New Zealand Cricket Team):

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தொடங்கும் முதல் சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆட்டத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி - நியூசிலாந்து கிரிக்கெட் அணி (PAK Vs NZ Cricket Champions Trophy 2025) மோதுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை மதியம் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. அன்றைய நாளில் கராச்சி நகரின் பகல்நேர வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும், இரவுநேர வெப்பநிலை 20 டிகிரி செல்சியசும் என்ற நிலையில் இருக்கும். காற்று மணிக்கு 12 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. மழைக்கு வாய்ப்புகள் இல்லை, வறண்ட வானிலை நிலவும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி Vs நியூசிலாந்து கிரிக்கெட் அணி:

முகம்மது ரிஸ்வான் (Mohammad Rizwan) தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் (Pakistan Team Squad for ICC Champions Trophy 2025) பாபர் அசாம், பகர் ஜாமன், சவுத் ஷகீல், தையப் தாகீர், பஹீம் அஸ்ரப், கம்ரன் குலாம், கஹஸில் ஷா, சல்மான் அஃகா, உஸ்மான் கான், அபிரர் அகமத், ஹாரிஸ் ரவுப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் அப்ரடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மிட்செல் சான்டநெர் (Mitchell Santner) தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் (New Zealand Team Squad for ICC Champions Trophy 2025), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, கைல் ஜேமீசன், டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ராச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.