பிப்ரவரி 02, குலாலம்பூர் (Sports News): ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பை 2025 போட்டி (ICC WOMENS U19 T20 WORLD CUP 2025), மலேஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நைஜீரியா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் வெவ்வேறு பிரிவுகளில் மோதிக்கொள்கின்றன. 31 ஜனவரி 2025 அன்று முதல் மற்றும் இரண்டாம் தகுதி சுற்றுகள் நடத்தப்பட்டு, 02 பிப்ரவரி 2025 அன்று இறுதி போட்டி நடைபெறுகிறது. இந்தியா சார்பில் நிகி பிரசாத் கேப்டனாக அணியை வழிநடத்த, அவரின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் திரிஷா, கமலினி, சங்கா, நிகி, ஐஸ்வரி, மிதிலா, ஆயுஷி, ஜோஷிதா, ஷப்னம், பருணிகா, வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய மகளிர் யு19 கிரிக்கெட் அணியை தென்னாபிரிக்க மகளிர் யு19 கிரிக்கெட் அணி (South Africa Women U19 vs India Women U19) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மலேஷியாவில் இருக்கும் குலாலம்பூர், பாயுமஸ் கிரிக்கெட் ஓவல் (Bayuemas Cricket Oval) மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (02 பிப்ரவரி 2025) அன்று மதியம் 12:00 மணியளவில், இந்திய நேரப்படி போட்டி தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) பக்கத்தில் நேரலையில் பார்க்கலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) ல் ஒளிபரப்பு செய்யப்படும். IND Vs ENG 5th T20i: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி 20 ஆட்டம்.. எங்கு? எப்போது? விபரம் இதோ.!
82 ரன்களில் சுருண்டது தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி:
இந்நிலையில், போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் சார்பில் விளையாடிய ஜம்மா 14 பந்துகளில் 16 ரன்னும், கரபோ 26 பந்துகளில் 10 ரன்னும், மைக்கே வேன் 18 பந்துகளில் 23 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். அனைவரும் சொற்பரன்களில் வெளியேறிய நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி மொத்தமாக 82 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், 2025 ஆம் ஆண்டில் தொடக்கத்திலேயே மகளிர் யு19 அணி வெற்றிக்கோப்பையுடன் தனது பயணத்தை தொடங்கும் என தேசிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு 83 ரன்கள் இலக்கு நிர்ணயம்:
𝗜𝗻𝗻𝗶𝗻𝗴𝘀 𝗕𝗿𝗲𝗮𝗸!
Superb bowling display from #TeamIndia! 👏 👏
3⃣ wickets for G Trisha
2⃣ wickets each for Parunika Sisodia, Aayushi Shukla & Vaishnavi Sharma
1⃣ wicket for Shabnam
Target 🎯 for India - 83
Scorecard ▶️ https://t.co/hkhiLzuLwj#SAvIND | #U19WorldCup pic.twitter.com/Mm4OdZfB95
— BCCI Women (@BCCIWomen) February 2, 2025