AUSW Vs INDW Semi-Final 2, Toss (Photo Credit: @ESPNcricinfo X)

அக்டோபர் 30, நவி மும்பை (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில், நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி வீழ்த்தி நவம்பர் 02ஆம் தேதி நவி மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு சென்றது. ENGW Vs RSAW Semi-Final 1: செமி பைனலில் கேப்டன் லாரா வால்வார்ட் அபார சதம்.. தென்னாப்பிரிக்கா மகளிர் 319 ரன்கள் குவிப்பு..!

இந்திய மகளிர் எதிர் ஆஸ்திரேலியா மகளிர் (India Women Vs Australia Women):

இந்நிலையில், இன்று (அக்டோபர் 30) இந்திய மகளிர் அணி - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி, நவி மும்பையில் நடைபெறுகிறது. அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியா மகளிர் அணி, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 60 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 49 போட்டிகளிலும், இந்திய மகளிர் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணியின் கேப்டன் அலிசா ஹீலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா மகளிர் அணி:

ஃபோப் லிட்ச்ஃபீல்ட், அலிசா ஹீலி (கேப்டன்), எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், அலானா கிங், கிம் கார்த், மேகன் ஸ்கட்.

இந்திய மகளிர் அணி:

ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, அமன்ஜோத் கவுர், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ராதா யாதவ், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்.