Australia Women Vs Pakistan Women (Photo Credit: @ESPNcricinfo X)

அக்டோபர் 08, கொழும்பு (Sports News): ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின், இறுதிப்போட்டி நவம்பர் 02ஆம் தேதி நடைபெறும். இந்நிலையில், இன்று (அக்டோபர் 08) ஆஸ்திரேலியா மகளிர் அணி - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் 9வது லீக் போட்டி, கொழும்புவில் உள்ள ஆர். பிரம்மதேசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியா மகளிர் அணி, பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டது. AFG Vs BAN 1st ODI: வங்கதேச அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்.. ஆப்கானிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு..!

ஆஸ்திரேலியா மகளிர் எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் (Australia Women Vs Pakistan Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பாத்திமா சனா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 221 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பெத் மூனி 109 ரன்கள், இறுதியில் களமிறங்கிய அலானா கிங் 51* ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் அதிகபட்சமாக நஷ்ரா சந்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா மகளிர் அணி வெற்றி:

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 36.3 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக சித்ரா அமீன் 35 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஆஸ்திரேலியா மகளிர் அணி சார்பில் கிம் கார்த் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா மகளிர் அணி:

அலிசா ஹீலி (கேப்டன்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், அலானா கிங், மேகன் ஸ்கட்.

பாகிஸ்தான் மகளிர் அணி:

முனீபா அலி, சித்ரா அமீன், நடாலியா பெர்வைஸ், சதாப் ஷமாஸ், எய்மான் பாத்திமா, பாத்திமா சனா (கேப்டன்), சித்ரா நவாஸ், ரமீன் ஷமிம், சாடியா இக்பால், நஷ்ரா சந்து, டயானா பைக்.