INDW Vs RSAW (Photo Credit: @BCCIWomen X)

அக்டோபர் 09, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின், இறுதிப்போட்டி நவம்பர் 02ஆம் தேதி நடைபெறும். இந்நிலையில், இன்று (அக்டோபர் 09) இந்தியா மகளிர் அணி - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் 10வது லீக் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இத்தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் பார்க்கலாம். ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்தியா மகளிர் அணி, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மகளிர் அணியை எதிர்கொள்கிறது. IND Vs WI 2nd Test: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட்.. தேதி, அணி விவரம், நேரலையில் பார்ப்பது எப்படி..?

இந்தியா மகளிர் எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் (India Women Vs South Africa Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியா மகளிர் அணி 49.5 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 94 ரன்கள், பிரதிகா ராவல் 37 ரன்கள், சினே ராணா 33 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்கா மகளிர் அணி சார்பில் க்ளோ ட்ரையோன் 3, நாடின் டி க்ளெர்க், மரிசான் கேப், நோன்குலுலேகோ மலாபா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்திய மகளிர் அணி:

பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி:

லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், மரிசான் கேப், அன்னேக் போஷ், சினாலோ ஜஃப்டா, க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், அயபோங்கா காக்கா, துமி செகுகுனே, நோன்குலுலேகோ மலாபா.