IND Vs WI 2nd Test (Photo Credit: @JeetbuzzNews X)

அக்டோபர் 09, டெல்லி (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (IND Vs WI) விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, நாளை (அக்டோபர் 10) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. Mitchell Starc: பிபிஎல் சீசன் 15; 11 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் மிட்செல் ஸ்டார்க்..!

இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் 2025 (India Vs West Indies Test Series 2025):

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 24 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 30 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 47 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 2வது டெஸ்டில் வெற்றி பெற்று, தொடரை டிரா செய்ய போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.

நேரலை விவரம்:

இத்தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.

இந்திய அணி வீரர்கள்:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா (துணைக் கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி, என். ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், அலிக் அதனேஸ், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ், காரி பியர், ஜோஹன் லேன், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன், ஜெடியா பிளேட்ஸ், கெவ்லான் ஆண்டர்சன், டெவின் இம்லாச்.