NZW Vs BANW (Photo Credit: @BCBtigers X)

அக்டோபர் 10, கவுகாத்தி (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின், இறுதிப்போட்டி நவம்பர் 02ஆம் தேதி நடைபெறும். இந்நிலையில், இன்று (அக்டோபர் 10) நியூசிலாந்து மகளிர் அணி - வங்கதேசம் மகளிர் அணிகள் மோதும் 11வது லீக் போட்டி, கவுகாத்தியில் நடைபெறுகிறது. இத்தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் பார்க்கலாம். சோஃபி டெவின் தலைமையிலான நியூசிலாந்து மகளிர் அணி, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது. IND Vs WI 2nd Test, Day 1: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட்; ஜெய்ஸ்வால் - சாய் சுதர்சன் இணை அபாரம்.. இந்தியா 318 ரன்கள் குவிப்பு..!

நியூசிலாந்து மகளிர் எதிர் வங்கதேசம் மகளிர் அணிகள் (New Zealand Women Vs Bangladesh Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டன் சோஃபி டெவின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 227 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக ப்ரூக் ஹாலிடே 69 ரன்கள், கேப்டன் சோஃபி டெவின் 63 ரன்கள் அடித்தனர். வங்கதேச மகளிர் அணி சார்பில் ரபேயா கான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூசிலாந்து மகளிர் அணி:

சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன்.

வங்கதேசம் மகளிர் அணி:

ருப்யா ஹைதர், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா (கேப்டன்), சோபானா மோஸ்டரி, சுமையா அக்டர், ஷோர்னா அக்தர், ஃபஹிமா காதுன், நஹிதா அக்டர், ரபேயா கான், மருஃபா அக்தர், நிஷிதா அக்தர் நிஷி.