IND Vs WI 2nd Test, Day 1 (Photo Credit: @BCCI X)

அக்டோபர் 10, டெல்லி (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (IND Vs WI) விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, இன்று (அக்டோபர் 10) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இத்தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். India Vs West Indies: சதம் கடந்து விளாசிய யஜஸ்வி ஜெய்ஸ்வால்.. இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்.. இந்தியா தெறி சம்பவம்.. சூடுபிடிக்கும் ஆட்டம்.!

இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் 2025 (India Vs West Indies Test Series 2025):

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் கேஎல் ராகுல் 38 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சாய் சுதர்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாய் சுதர்சன் 87 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து (173* ரன்கள்) அசத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 90 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 318 ரன்கள் அடித்தது. சுப்மன் கில் 20* ரன்கள், ஜெய்ஸ்வால் 173* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி வீரர்கள்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், அலிக் அதனேஸ், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), டெவின் இம்லாச், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோமல் வாரிக்கன், காரி பியர், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ்.