SLW Vs PAKW, Toss (Photo Credit: @CatchOfThe40986 X)

அக்டோபர் 24, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தற்போது, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தகுதிபெறவில்லை. இந்நிலையில், இன்று (அக்டோபர் 24) இலங்கை மகளிர் அணி - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் 25வது லீக் போட்டி, இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறுகிறது. INDW Vs NZW: நியூசிலாந்து போராடி தோல்வி.. அரையிறுதிக்கு நுழைந்தது இந்திய மகளிர் அணி..!

இலங்கை மகளிர் எதிர் பாகிஸ்தான் மகளிர் (Sri Lanka Women Vs Pakistan Women):

சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி, பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. நடப்புத் தொடரில், இலங்கை அணி ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை. பாகிஸ்தான் மகளிர் அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 3 மணிநேரம் பெய்த கனமழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இலங்கை மகளிர் அணி:

விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, ஹர்ஷித சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, டெவ்மி விஹங்கா, சுகந்திகா குமாரி, மல்கி மதரா, இனோகா ரணவீர.

பாகிஸ்தான் மகளிர் அணி:

முனீபா அலி, ஒமைமா சொஹைல், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பெர்வைஸ், பாத்திமா சனா (கேப்டன்), எய்மான் பாத்திமா, சையதா அரூப் ஷா, ரமீன் ஷமிம், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.