LKK Vs SMP (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 11, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. நேற்று (ஜூன் 10) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், திருச்சி அணியை வீழ்த்தி சேலம் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. SA Vs AUS WTC Final Toss Update: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?

லைகா கோவை கிங்ஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் (Lyca Kovai Kings Vs Siechem Madurai Panthers):

இந்நிலையில், இன்று (ஜூன் 11) லைகா கோவை கிங்ஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் (LKK Vs SMP, Match 8) அணிகள் மோதுகின்றன. ஷாருக்கான் தலைமையிலான கோவை அணி, என்எஸ் சதுர்வேத் தலைமையிலான மதுரை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கோவை அணி 6 போட்டியிலும், மதுரை அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள்:

ஷாருக்கான் (கேப்டன்), பாலசுப்ரமணியம் சச்சின், சாய் சுதர்சன், ஜிதேந்திர குமார், ஆன்ட்ரே சித்தார்த், கே விஷால் வைத்யா, பி விட்யூத், பிரதீப் விஷால், ராமலிங்கம் ரோஹித், பி ஆதித்யா, மாதவ பிரசாத், சுரேஷ் லோகேஷ்வர், எம் சித்தார்த், அம்ப்ரிஷ் ஆர் எஸ், ரமேஷ் திவாகர், குரு ராகவேந்திரன், கோவிந்த் ஜி, ஜாதவேத் சுப்ரமண்யன், என் கபிலன், பி புவனேஸ்வரன்.

சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி வீரர்கள்:

என்எஸ் சதுர்வேத் (கேப்டன்), ஷ்யாம் சுந்தர் எஸ், பால்சந்தர் அனிருத், சஞ்சீவ் குமார், ராம் அரவிந்த், பி சரவணன், சி சரத் குமார், அதீக் உர் ரஹ்மான், பி விக்னேஷ், எஸ் ராஜலிங்கம், அஜய் சேத்தன் ஜே, கணேஷ் எஸ், முருகன் அஷ்வின், கவுதம் தாமரை கண்ணன், கார்த்திக் மெய்யப்பன், ஷங்கர் கணேஷ், தீபேஷ் டி, குர்ஜப்னீத் சிங், அயுஷ் எம், சூர்யா ஆனந்த் எஸ்.