
ஜூன் 10, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். SS Vs TGC: அதிரடி காட்டிய ஹரி நிசாந்த்.. திருச்சி வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு..!
சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (SKM Salem Spartans Vs Trichy Grand Cholas):
இந்நிலையில், இன்று (ஜூன் 10) சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (SS Vs TGC, Match 7) அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் சுரேஷ் குமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். சேலம் அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹரி நிசாந்த் - சன்னி சந்து அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹரி நிசாந்த் 83 ரன்னிலும், சன்னி சந்து 45 ரன்னிலும் அவுட்டானர். இறுதியில், சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்தது.
சேலம் த்ரில் வெற்றி:
இதனையடுத்து, திருச்சி அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. ஆரம்பத்திலேயே பவர் பிளே 6 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சுரேஷ் குமார் டக் அவுட்டாக, தொடக்க வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ராஜ்குமார் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 59 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில், ஜகதீசன் கவுசிக் தனியாளாக போராடி 62 ரன்கள் அடித்து கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம், சேலம் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சேலம் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.