SS Vs TGC 1st Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 10, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். RCB For Sale: ஆர்சிபி அணி விற்பனை? எத்தனை கோடி தெரியுமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (SKM Salem Spartans Vs Trichy Grand Cholas):

இந்நிலையில், இன்று (ஜூன் 10) சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (SS Vs TGC, Match 7) அணிகள் மோதுகின்றன. அபிஷேக் செல்வகுமார் தலைமையிலான சேலம் அணி, சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் சுரேஷ் குமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹரி நிசாந்த் - சன்னி சந்து அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹரி நிசாந்த் 83 ரன்னிலும், சன்னி சந்து 45 ரன்னிலும் அவுட்டானர். இறுதியில், சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்தது.

ஹரி நிசாந்த் அதிரடி அரைசதம்: