ITT Vs CSG 1st Batting (Photo Credit: @StarSportsTamil X)

ஜூன் 06, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் நேற்று (ஜூன் 05) தொடங்கியது. ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 06) ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (ITT Vs CSG, Match 2) அணிகள் மோதுகின்றன. ITT Vs CSG Toss Update: திருப்பூர் Vs சேப்பாக் டாஸ் அப்டேட்.. சேப்பாக் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Idream Tiruppur Tamizhans Vs Chepauk Super Gillies):

சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி, பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபராஜித் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சத்விக் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த கே ராஜ்குமார் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய துஷார் ராஹேஜா அரைசதம் (43 பந்துகளில் 79 ரன்கள்) அடித்து அவுட்டானார். இறுதியில், பிரதோஷ் ரஞ்சன் பால் (28 பந்துகளில் 38 ரன்கள்) அதிரடியாக விளையாட, திருப்பூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் அடித்தது. சேப்பாக் அணி தரப்பில் அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்கள், பிரேம் குமார், லோகேஷ் ராஜ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.