
ஜூன் 10, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. நேற்று (ஜூன் 09) நடைபெற்ற ஆட்டத்தில், நெல்லை அணியை வீழ்த்தி சேப்பாக் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. SS Vs TGC: டிஎன்பிஎல் 7வது லீக் போட்டி.. சேலம் - திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை..!
சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (SKM Salem Spartans Vs Trichy Grand Cholas):
இந்நிலையில், இன்று (ஜூன் 10) சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (SS Vs TGC, Match 7) அணிகள் மோதுகின்றன. அபிஷேக் செல்வகுமார் தலைமையிலான சேலம் அணி, சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சேலம் அணி 1 போட்டியிலும், திருச்சி அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் சுரேஷ் குமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள்:
அபிஷேக் செல்வகுமார் (கேப்டன்), ஹரி நிஷாந்த், ஆர் கவின், விவேக் ஆர், சன்னி சந்து, நிதிஷ் ராஜகோபால், எஸ் ஹரிஷ் குமார், முகமது எம், ஜே கவுரி சங்கர், எம் பொய்யாமொழி, ரஹில் ஷா. Nicholas Pooran Retirement: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு.. வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஷாக் நியூஸ்..!
திருச்சி கிராண்ட் சோழஸ் அணி வீரர்கள்:
சுரேஷ் குமார் (கேப்டன்), சஞ்சய் யாதவ், சுஜய் சிவசங்கரன், யு முகிலேஷ், ஜகதீசன் கவுசிக், வசீம் அகமது, பி சரவண குமார், ஆர் ராஜ்குமார், என் செல்வகுமாரன், வி அதிசயராஜ் டேவிட்சன், கே ஈஸ்வரன்.