RCB Vs PBKS IPL Final 2025 Toss Update (Photo Credit: @Sbettingmarkets X)

ஜூன் 03, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து, புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதனையடுத்து நடந்த பிளே ஆப் சுற்று முடிவில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (RCB Vs PBKS, IPL 2025 Final) அணி இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. Ahmedabad Rains: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி.. மழைக்கு வாய்ப்பா? அகமதாபாத் வானிலை நிலவரம் என்ன..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ எதிர் பஞ்சாப் கிங்ஸ் (Royal Challengers Bangalore Vs Punjab Kings):

ஐபிஎல் தொடர் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இதனால், இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதுவரை 36 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 வெற்றியும், பஞ்சாப் கிங்ஸ் அணி 18 வெற்றியும் பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங் தேர்வு: