Siddharth Mallya Celebrates RCB Victory (Photo Credit: @UANowMemes X)

ஜூன் 04, பெங்களூரு (Karnataka News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) நேற்று (ஜூன் 03) நடைபெற்ற இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 18 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி கோப்பையை கைப்பற்றியது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். RCB Victory Celebrations: விடிய விடிய கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர் உயிரிழப்பு..!

சித்தார்த் மல்லையா நெகிழ்ச்சி:

இந்நிலையில், முன்னாள் ஆர்சிபி அணியின் தலைவர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா (Siddharth Mallya), நேற்று நடந்த இறுதிப்போட்டியை டிவியில் நேரலையில் பார்த்துள்ளார். அப்போது, ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றுவதை பார்த்து கண்கலங்கி நெகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ இதோ: