
ஜூன் 03, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து, புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதனையடுத்து நடந்த பிளே ஆப் சுற்று முடிவில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (RCB Vs PBKS, IPL 2025 Final) அணி இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. Rajat Patidar Wicket: ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் ஏமாற்றம்.. ஜேமிசன் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி..!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ எதிர் பஞ்சாப் கிங்ஸ் (Royal Challengers Bangalore Vs Punjab Kings):
இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் - விராட் கோலி இணை துவக்கம் கொடுத்தது. அதிரடியாக தொடங்கிய பில் சால்ட் 16 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த மயங் அகர்வால் (24 ரன்கள்) சஹால் சுழலில் சிக்கினார். இதனையடுத்து, அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் (16 பந்துகள் 26 ரன்கள்) கைல் ஜேமிசன் பந்தில் எல்பிடபில்யூ அவுட் ஆனார். மறுபுறம், நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி (35 பந்துகள் 43 ரன்கள்) ஓமர்சாய் பந்தில் அவரது சிறப்பான கேட்ச்சால் விக்கெட்டை பறிகொடுத்தார்.