IND Vs NZ 2nd Test Day 1 (Photo Credit: @News4u36hindi X)

அக்டோபர் 24, புனே (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 24) இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ 2nd Test, Day 1) அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் (Pune) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. IND Vs NZ 2nd Test: முதல் நாள் மதிய உணவு இடைவேளை; நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்.. அஸ்வின் அபாரம்..!

அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி வந்தது. இதனிடையே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. கேப்டன் டாம் லாதம், வில் யங், டெவான் கான்வே (Devon Conway) ஆகிய மூவரும் அஸ்வின் (Ravichandran Ashwin) பந்தில் அவுட்டாகி வெளியேறினர். இதில் கான்வே 76 ரன்னில் அவுட்டானார். பின் வந்த ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். இவர் 65 ரன்னில் விளையாடிக்கொண்டிருந்த போது, வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) சுழலில் சிக்கி போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சுந்தர் பந்துவீச்சில் சிக்கிக் கொண்டனர். மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner) அதிரடியாக விளையாடி 33 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி சார்பில் சுந்தர் 7 விக்கெட்கள், அஸ்வின் 3 விக்கெட்கள் என மொத்தம் 10 விக்கெட்களையும் சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர். நியூசிலாந்து அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே ரோஹித் சர்மா (Rohit Sharma) டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் அடித்துள்ளது. நாளை 2-ஆம் நாள் ஆட்டம் காலை 9.30 மணியளவில் தொடங்கவுள்ளது.

வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தல்: