LSG Vs RCB Toss Update (Photo Credit: @DailyCricketbuz X)

மே 27, லக்னோ (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், நேற்று (மே 26) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டியில், பஞ்சாப் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. இந்நிலையில், இன்று (மே 27) 70வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. இது ஐபிஎல் 2025 தொடரின் கடைசி லீக் போட்டி ஆகும். PBKS Vs MI: பஞ்சாப் அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்..!

சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Lucknow Super Giants Vs Royal Challengers Bengaluru):

பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 3வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதலிரண்டு இடங்களுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. எனவே, இப்போட்டியில் வெற்றி பெற பெங்களூரு அணி முனைப்பு காட்டும். அதே சமயத்தில், ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிய லக்னோ அணி வெற்றியுடன் தொடரை முடிக்க அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

பெங்களூரு டாஸ் வென்று பவுலிங் தேர்வு: