PBKS Vs MI (Photo Credit: @IPL X)

மே 26, ஜெய்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று (மே 26) நடப்பு ஐபிஎல் தொடரின் 69வது ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, 4வது இடத்தில் இருக்கும் மும்பை அணியுடன் மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. PBKS Vs MI: சூர்யகுமார் யாதவ் அதிரடி அரைசதம்.. பஞ்சாப் வெற்றி பெற 185 ரன்கள் இலக்கு..!

பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (Punjab Kings Vs Mumbai Indians IPL 2025):

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிரடியாக விளையாடி ரிக்கல்டன் 27, ரோஹித் 24 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) அதிரடியாக விளையாடி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்தார். தொடர்ச்சியாக, அதிக இன்னிங்ஸில் (14) 25+ ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இப்போட்டியில், அவர் 57 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார். இறுதியில், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் அடித்தது.

பஞ்சாப் வெற்றி:

பஞ்சாப் அணி 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. முதலில் பிரப்சிம்ரன் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த ஆர்யா - இங்கிலீஷ் அதிரடியாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். ஆர்யா 62 ரன்கள் அவுட்டானார். அதிரடியாக விளையாடிய இங்கிலீஷ் 73 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இறுதியில், பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.