அக்டோபர் 25, சிட்னி (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் மோதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 19 மற்றும் அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்தது. ஒரு நாள் போட்டி தொடருக்கான கோப்பையையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. India Women Vs Bangladesh Women: இந்தியா Vs பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டி எப்போது?.. நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு?
இந்தியா எதிர் ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket):
போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சார்பில் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில் 41 ரன்கள் அடித்திருந்தார். டார்விஸ் ஹெட் 25 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்தார். மாட் ஷார்ட் 40 பந்துகளில் 30 ரன்கள் அடித்திருந்தார். மாட் ரென்ஸா 58 பந்துகளில் 56 ரன்கள் அடித்திருந்தார். அலெக்ஸ் கார்லே 37 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருந்தார். கூப்பர் கனொலி 34 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்தார். நாதன் எல்லீஸ் 19 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்தார். 46.4 ஓவர் முடிவில் பத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி 236 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். இதனையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஆஸ்திரேலியா Vs இந்தியா இடையேயான போட்டியில், 2 வெற்றியுடன் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி இருந்தாலும், இந்தியா ஆறுதல் வெற்றியாவது அடையுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
4 விக்கெட் எடுத்து அசத்திய ஹர்ஷித் ராணா:
CLUTCH! ⭐⭐⭐⭐#HarshitRana bags his maiden 4-wicket haul in international cricket as #TeamIndia bowl out Australia in Sydney 👏#AUSvIND 👉 3rd ODI | LIVE NOW 👉 https://t.co/0evPIuANAu pic.twitter.com/JXFhwCDgzX
— Star Sports (@StarSportsIndia) October 25, 2025