Indian Cricketers With Junior NTR (Photo Credit: @CricCrazyJohns Twitter)

ஜனவரி 17, ஹைதராபாத்: 3 தொடர்கள் கொண்ட ஒருநாள் (One Day Innings - ODI) போட்டியில் இலங்கை (SriLanka) கிரிக்கெட் அணியை 3-0 க்கு என்ற கணக்கில் வெற்றிகொண்ட இந்திய அணி (Indian Cricket Team), அடுத்தபடியாக நியூசிலாந்து அணியுடன் (New Zealand) 3 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. இந்த போட்டி ஜனவரி 18ம் தேதியான நாளை தொடங்குகிறது.

முதல் போட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் (Hyderabad) சர்வதேச ராஜீவ் காந்தி விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்திய அணியினர் நேற்று கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றுவிட்டனர். அவர்கள் போட்டிக்காக தொடர்ந்து தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவில் தெலுங்கு மொழியில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் ராமோ ராஜு என்ற ஜூனியர் என்.டி.ஆர் (Junior NTR)., இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் நேரில் சந்தித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா (Captain Rohit Sharma) தலைமையில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. Rishabh Pant Thanks: மரணத்தை தொட்டு வந்த ரிஷப்.. உயிரை காப்பாற்றிய நாயகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி..!

இந்திய அணியில் ஸுப்மன் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விராட் கோஹ்லி (Virat Kohli), ஷ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், கே.எஸ் பாரத் (wk), ஹர்திக் பாண்டியா (VC), வாஷிங்க்டன் சுந்தர், ஷபாஸ் அமீத், ஷர்த்துல் தாகூர், யுஸ்வேந்திர ஷாஹுல், குல்தீப் யாதவ், முஹம்மத் ஷமி (Mohammed Shami), முஹம்மத் சிராஜ், உம்ரன் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணியில் (New Zealand Squad) டாம் லாதம் (c), ஃபின் ஆலன், டக் பிரேஸ்வெல் [மாட் ஹென்றிக்காக], மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஹென்றி சோ ஷிப்லெதி, பிளேர் டிக்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளன.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 17, 2023 11:24 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).