IND vs WI 2nd Test 2025 Toss (Photo Credit: @BCCI X)

அக்டோபர் 10, புதுடெல்லி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி - இந்திய தேசிய கிரிக்கெட் அணியுடன் ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அந்த வகையில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 10ஆம் தேதியான இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி Vs மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதுகிறது. இந்த ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. INDW Vs RSAW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; இந்தியாவுக்கு எதிரான போட்டியில்.. தென்னாப்பிரிக்கா மகளிர் அணி த்ரில் வெற்றி..! 

இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் போட்டி (India Vs West Indies Cricket Match):

இந்த போட்டியை பொறுத்தவரையில், இந்தியா வெற்றி பெற 94 விழுக்காடு வாய்ப்புகளும், மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற மூன்று விழுக்காடு வாய்ப்புகளும் உள்ளன. போட்டி சமனில் முடிய மூன்று விழுக்காடு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய மண்ணில் மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் அணி தொடர்ச்சியாக சொதப்பி வந்தாலும், அது விடாமுயற்சியுடன் போராடி வருகிறது. முந்தைய ஆறு போட்டிகளை பொறுத்தமட்டில், அதில் தோல்வியை தழுவி இருந்தாலும், போட்டி மூன்று நாட்களுக்குள் முடிவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை குறைத்துள்ளது. டெல்லி மைதானம் போட்டியின் தொடக்கம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். பேட்டர்களுக்கும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இரண்டு அணி வீரர்களும் ரன்களை குவிக்கலாம் என்ற நிலையில், போட்டியில் சுவாரசியமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த போட்டியில் ஒரு அணி வீரர் நிலையாக ஆடினால், மூன்று சதங்கள் அடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் டாஸ் அப்டேட் (IND Vs WI 2nd Test Toss Update):

இந்த போட்டி இன்று காலை 9 மணிமுதல் தொடங்கி நடைபெறும் நிலையில், டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் ஹில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீசுகிறது.

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் டாஸ் அப்டேட் (India Vs West Indies Toss Update):