Chess Olympiad 2024 | Team India (Photo Credit: @Chess24 X)

செப்டம்பர் 23, ஹங்கேரி (Sports News): ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில், 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad 2024) போட்டித்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த போட்டியில் இந்திய செஸ் வீரர்கள் சார்பில் ஆண்கள், பெண்கள் பிரிவு தனித்தனியே கலந்து கொண்ட நிலையில், இரண்டு பிரிவிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய செஸ் அணியின் ஆண்கள் பிரிவு சார்பில் விதித் குஜராத்தி, அர்ஜுன், ப்ரக்யானந்தா, பென்டலா ஹரிகிருஷ்ணா, குகேஷ் ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்தனர். இறுதிச்சுற்றில் ஸ்லோவேனியா அணியை எதிர்கொண்ட அர்ஜுன் வெற்றி வாகை சூடினார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியா போட்டிகளில் இந்தியா இந்தியா வெண்கல பதக்கமே வென்ற நிலையில், தற்போது தங்கம் என்று சாதனை படைத்துள்ளது.

ஆடவர் & பெண்கள் பிரிவில் வரலாற்று சாதனை:

இந்திய பெண்கள் செஸ் அணியின் சார்பில் திவ்யா, ஹரிகா, வைஷாலி, டனியா, வந்திகா அகர்வால் ஆகியோரும் தங்கப்பதக்கம் வென்றனர். இந்த வெற்றியின் வாயிலாக உலகளாவிய கவனத்தையும் இந்திய செஸ் அணி ஈர்த்துள்ளது. இந்திய அணியின் சார்பில் வெற்றிவாகை சூடிய அர்ஜுனுக்கு 18 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு அபார வெற்றியை வழங்கிய இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் செஸ் அணியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார்.

வெற்றிகொண்டாட்டத்தில் இந்திய ஆடவர் & மகளிர் செஸ் அணி:

வெற்றிக்குப்பின்னர் குகேஷ் அளித்த பேட்டி:

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய செஸ் அணி வெற்றி பெற்றதால், இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி கிடைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் திறந்த மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது நம்பமுடியாத புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்த வெற்றியானது செஸ் ஆர்வலர்களின் தலைமுறைகளை சிறந்து விளங்க ஊக்குவிக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.