Indian Test Team (Photo Credit: @hemantbhavsar86 X)

செப்டம்பர் 13, சென்னை (Sports News): வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் (Bangladesh Tour Of India 2024) மேற்கொண்டுள்ளது. இதில், வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் (IND Vs BAN Test Series) தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னையிலும், 2-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்திலும் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறக்கூடிய முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ கடந்த செப்டம்பர் 08-ஆம் தேதி அறிவித்தது. அதேபோல, வங்கதேச வீரர்கள் பட்டியல் நேற்று (செப்டம்பர் 12) வெளியிடப்பட்டது. PM Modi Meets Paralympic Medallists: பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினர்.. பிரதமர் நரேந்திர மோடி உடன் சந்திப்பு..!

இந்திய அணி (India Squad):

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்

வங்கதேச அணி (Bangladesh Squad):

நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ஹசன். , ஜாக்கர் அலி, ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் (Rishabh Pant), கடைசியாக 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார். சுமார் ஒன்றரை வருடத்துக்கு பிறகு, மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். டி20, ஒருநாள் போட்டிகள், ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடியது போல டெஸ்ட் போட்டிகளிலும் தனது கம்பேக்கை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுதவிர, அனுபவ வீரர்களான ரோகித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோருடன் இளம் வீரர்களான சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல், யஷ் தயாள் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மறுபுறம், வங்கதேச அணி அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தது. இதன்காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரை ஜியோ சினிமா (Jio Cinema) நேரடி ஒளிபரப்பு செய்கிறது.