Rohit Sharma IND Vs ENG 1st ODI 2025 (Photo Credit: @academy_dinda / @KrishVK_18 X)

பிப்ரவரி 06, நாக்பூர் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி (IND Vs ENG 1st ODI) இன்று (பிப்ரவரி 06) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் (VCA) மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில், ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகின்றனர். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு, முகமது சமி ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) ஓடிடியிலும் நேரலையில் பார்க்கலாம். IND Vs ENG 1st ODI: இந்தியா - இங்கிலாந்து முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. நேரலையை பார்ப்பது எப்படி? தொடங்கும் நேரம் என்ன? 

ரோகித் சர்மா (Rohit Sharma) கேட்ச் அவுட்:

போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி (IND Vs ENG 1st ODI Score) 47.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 248 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய பில் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்கள், பென் டக்கட் 29 பந்துகளில் 32 ரன்கள், ஜோஸ் பட்லர் 67 பந்துகளில் 52 ரன்கள், ஜேக்கப் 64 பந்துகளில் 51 ரன்கள் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். இதனையடுத்து, இந்திய அணி தனது இலக்கை துரத்தும் முயற்சியில் இறங்கியது. போட்டியின் தொடக்கத்தில் களமிறங்கிய ரோஹித் சர்மா, 7 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் அடித்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். சபீக் முகம்மது பந்தில், லைம் லிவிங்ஸ்டோனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்து அவர் வெளியேறினார். ரோஹித் சர்மா பல்வேறு பிரிவுகளில் நடந்த 16 போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி தந்த நிலையில், தற்போதைய ஆட்டத்திலும் அவர் 2 ரன்களில் வெளியேறியது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

ரோஹித் சர்மாவின் விக்கெட் பறிபோன காட்சி:

ரோஹித் சர்மாவின் விளையாட்டால் திருப்தியின்மையை எதிர்கொண்ட ரசிகர்:

கடந்த 16 போட்டிகளாக ரோகித் சர்மாவின் விளையாட்டு மந்தமாகி இருப்பதாக பதிவர் கருத்து: