IND vs WI 2nd Test 2025 Yashasvi Jaiswal Smashes Century (Photo Credit : @BCCI X)

அக்டோபர் 10, புதுடெல்லி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி - இந்திய தேசிய கிரிக்கெட் அணியுடன் (India - West Indies) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அந்த வகையில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 10ஆம் தேதியான இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி Vs மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதுகிறது. இந்த ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. IND Vs WI Toss Update: இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்று இந்தியா பேட்டிங்.!

இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் போட்டி (India Vs West Indies Cricket Match):

இந்த போட்டியை பொறுத்தவரையில், இந்தியா வெற்றி பெற 94 விழுக்காடு வாய்ப்புகளும், மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற மூன்று விழுக்காடு வாய்ப்புகளும் உள்ளன. போட்டி சமனில் முடிய மூன்று விழுக்காடு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய மண்ணில் மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் அணி தொடர்ச்சியாக சொதப்பி வந்தாலும், அது விடாமுயற்சியுடன் போராடி வருகிறது. முந்தைய ஆறு போட்டிகளை பொறுத்தமட்டில், அதில் தோல்வியை தழுவி இருந்தாலும், போட்டி மூன்று நாட்களுக்குள் முடிவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை குறைத்துள்ளது. டெல்லி மைதானம் போட்டியின் தொடக்கம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். பேட்டர்களுக்கும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இரண்டு அணி வீரர்களும் ரன்களை குவிக்கலாம் என்ற நிலையில், போட்டி சுவாரசியமாக நடந்து வருகிறது.

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் டாஸ் அப்டேட் (IND Vs WI 2nd Test Toss Update):

இந்த போட்டி இன்று காலை 9 மணிமுதல் தொடங்கி நடைபெறும் நிலையில், டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் ஹில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீசுகிறது. இந்த நிலையில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் அவரின் 7வது டெஸ்ட் போட்டியில் 100 ரன்களை கடந்து அசத்தினார். இன்றைய போட்டியின் தொடக்கத்தின் முதலே அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ஜெயிஸ்வால் 145 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். 16 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் போல இளவயதில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக 23 வயதில் அதிக சதமடித்த வீரர்கள் என்ற பெருமையையும் இவர் தக்க வைத்துள்ளார்.

சதம் அடித்து விளாசிய யஜஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal Century Video):