அக்டோபர் 13, டெல்லி (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (IND Vs WI) விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம். India Vs West Indies Highlights: இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஹைலைட்ஸ்.. 2வது இன்னிங்ஸ் நிலவரம் என்ன?
இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் 2025 (India Vs West Indies Test Series 2025):
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 134.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 518 ரன்கள் அடித்து, டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்கள், கேப்டன் சுப்மன் கில் 129 ரன்கள், சாய் சுதர்சன் 87 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா பாலோ ஆன் கொடுத்தது.
இந்தியா அபாரம்:
இதன்பின்னர், வெஸ்ட் இண்டீஸ் அணி 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 118.5 ஓவர்களில் 390 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜான் கேம்பல் 115 ரன்கள், ஷாய் ஹோப் 103 ரன்கள் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இறுதியில், கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்டின் கிரீவ்ஸ் 50* ரன்கள் - ஜெய்டன் சீல்ஸ் 32 ரன்கள் இணை சிறப்பாக விளையாடி 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன்மூலம், இந்தியா வெற்றி பெற 121 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4வது நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 18 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் அடித்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 58 ரன்கள் தேவைப்படுகிறது. கேஎல் ராகுல் 25*, சாய் சுதர்சன் 30* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், அலிக் அதனேஸ், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), டெவின் இம்லாச், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோமல் வாரிக்கன், காரி பியர், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ்.