அக்டோபர் 12, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் (ICC Women's World Cup), இன்று 13வது போட்டி ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி (Australia Women's Cricket Team) பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய பெண்கள் கிரிக்கெட் (India Women Cricket Team) அணி பேட்டிங் செய்தது.
இந்தியா Vs ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் (India Vs Australia Women's Cricket):
பிரதிகா ராவல் 96 பந்துகளில் 75 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 66 பந்துகளில் 80 ரன்களும், ஹர்லின் டியோல் 42 பந்துகளில் 38 ரன்களும், ஹர்மன் பிரீத் கவுர் 17 பந்துகளில் 22 ரன்களும், ஜெமியா 21 பந்துகளில் 33 ரன்களும், ரிச்சா கோஸ் 22 பந்துகளில் 32 ரன்களும், அமஞ்சோத் கவுர் 12 பந்துகளில் 16 ரன்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். மொத்தமாக 48.5 ஓவரில் இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் இழந்தாலும் 330 ரன்கள் சேர்த்திருந்தது. இதனை அடுத்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணி களமிறங்கியது. INDW Vs AUSW: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தரமான சம்பவம்.. ஆஸ்திரேலியாவுக்கு 331 ரன்கள் இலக்கு.!
இந்தியா பெண்கள் எதிர் ஆஸ்திரேலியா பெண்கள் (India Women Vs Australia Women ICC Women's World Cup):
ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் போட்டியின் இறுதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அபார வெற்றி அடைந்தது. அலிஷா ஹீலி 107 பந்துகளில் 142 ரன்கள் அடித்து மிரளவிட்டார். சுமார் 21 பவுண்டரி, 3 சிக்ஸர் என மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களின் ஆதரவையும் அதிரடியால் பெற்றார். போயேபி லிட்சியில்ட் 39 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். எலிசி பெர்ரி 52 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். ஆஷ்லேயிங் கார்ட்னர் 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். ஷோபி மோலினியுக்ஸ் 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். கிம் 13 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணி வெற்றி:
ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 49வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இந்த வெற்றியின் வாயிலாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நடப்பு தொடரில் தனது 2 வது தோல்வியை எதிர்கொள்கிறது. 50 ஓவர்களில் அதிக ரன்களை குவித்தாலும், பேட்டிங் செய்வோருக்கு சாதகமான மைதானத்தில் இந்த ஸ்கோர் பலரும் எதிர்பார்த்த ஒன்று. அதனை ஆஸ்திரேலியா எளிதில் சேசிங் செய்துவிடும்.
பெத் மூணே விக்கெட் காலி:
Jemimah Rodrigues with a moment of brilliance in the field 🥵
Beth Mooney’s gone and the pressure’s back on Australia!
Catch the LIVE action ➡https://t.co/qAoZd44TEs#CWC25 👉 #INDvAUS | LIVE NOW on Star Sports & JioHotstar! pic.twitter.com/hvpAl559Mr
— Star Sports (@StarSportsIndia) October 12, 2025