ஜனவரி 25, சேப்பாக் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில், ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் (Eden Gardens) மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 (IND Vs ENG) போட்டியில், இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. IND Vs ENG 2nd T20i: சேப்பாக்கத்தில் இன்று இந்தியா Vs இங்கிலாந்து டி20 போட்டி.. நேரலையை பார்ப்பது எப்படி? சேப்பாக்கம் செல்வோருக்கு டிப்ஸ்.!
இந்தியா பவுலிங் தேர்வு:
இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி சென்னையில் சேப்பாக் (Chepauk)மைதானத்தில் இன்று (ஜனவரி 25) நடைபெறவுள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு முகமது சமி அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், வாசிங்டன் சுந்தர், துருவ் ஜீரல் ஆகியோர் இந்த போட்டியில் இடம்பிடித்துள்ளனர்.