ஜனவரி 24, சேப்பாக்கம் (Sprots News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து (Team England) கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் (IND Vs ENG T20i Series 2025), 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (IND Vs ENG ODI Series 2025) கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளில் டி20 பிரிவில் முதல் ஆட்டம் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகள், நியூசிலாந்து எதிராக இந்தியாவில் நடந்த ஆட்டங்கள் என தடுமாறிக்கிடந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் வெற்றி அடைந்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. IND Vs ENG 1st T20i 2025: வெளுத்து வாங்கிய அபிஷேக்.. இங்கிலாந்து அணியை 13 ஓவரில் வென்ற இந்தியா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மெட்ரோவில் (Chennai Metro Rail) இலவச பயணம்:
இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம், ஜனவரி 25, 2025 இன்று இரவு 7 மணிக்கு, சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை நேரில் காண ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போட்டியை மைதானத்திற்கு சென்று நேரில் காணுவார்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், புறநகர் மின்சார இரயில் சேவை, மெட்ரோ இரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள், மைதானத்தில் அனுமதி டிக்கெட் வைத்திருந்தால், அதனை வைத்து இலவசமாக மெட்ரோவில் பயணமும் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Chennai Metro Rail: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி; அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட மெட்ரோ இரயில் நிர்வாகம்.. விபரம் உள்ளே.!
நேரலையில் பார்க்க:
இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் (Disney Hotstar) பக்கங்களில் நேரலையில் பார்க்கலாம்.