மார்ச் 07, தர்மசாலா (Sports News): இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இந்தியா-இங்கிலாந்து (IND Vs ENG Test Series 2024) இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது. முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினர். நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இருப்பினும், பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக, ஜாக் கிராலி 79 (108 பந்துகள்) ரன்கள் எடுத்தார். Kerala Thiruvananthapuram Women Burnt To Death: பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக்கொலை – கருத்து வேறுபாட்டால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் வெறிச்செயல்..!
சுழல் ஜாலம் காட்டிய இந்திய ஸ்பின்னர்கள்: இந்திய அணி சார்பில் குல்தீப், அஸ்வின் ஆகியோர் மிக துல்லியமாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்தனர். இவர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இங்கிலாந்து அணி தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய குல்தீப் 5, அஸ்வின் 4 மற்றும் ஜடேஜா 1 விக்கெட்களையும் எடுத்தனர்.
அரைசதம் கடந்த தொடக்க ஆட்டக்காரர்கள்: தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் அமைந்தது. கேப்டன் ரோஹித்-ஜெய்ஸ்வால் கூட்டணி அரைசதம் கடந்து அசத்தினர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து கில் நிதானமாக விளையாடினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 135 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது.