ஆகஸ்ட் 06, பாரிஸ் (Sports News): சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும் (Paris Olympics). 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் ஜூலை 26 அன்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். Neeraj Chopra Qualifies For Javelin Finals: கடைசி வீச்சிற்கு தயாரான நீரஜ் சோப்ரா.. ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு அத்தியாயம் படைப்பாரா?!
மல்யுத்த போட்டி: இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருந்த ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இன்று பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத் (Indian wrestler Vinesh Phogat), ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார். இதில் வினேஷ் போகத் 3-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதில் யு சுசாகி 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் வினேஷ் போகட் (50 கிலோ) உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
THE BIGGEST MOMENT OF PARIS OLYMPICS. 🤯
- Vinesh Phogat stuns reigning Gold Medalist and No.1 seed. 🇮🇳🏅 pic.twitter.com/x1FK3WeaBr
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 6, 2024