டிசம்பர், 8: உலகக்கோப்பையை கைப்பற்ற கிரிக்கெட் (Cricket) விளையாட்டில் ஈடுபடும் பல உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதில், ஒருநாள் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் தொடர், உலகக்கோப்பை, ஐ.பி.எல் (World Cup, T20, IPL, ODI)உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தனது அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தயார் செய்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் வரவேற்பின் காரணமாகவும், அதில் இருக்கும் வீரர்களின் அளப்பரிய அசாத்திய திறமைகள் மூலமாகவும் கோடிக்கணக்கில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போதைய நிலையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகள் குறித்த தொகுப்பை இங்கு காணலாம்.
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்:
04 டிசம்பர் 2022: பங்களாதேஷ் Vs இந்தியா - பகல் 12:00 மணிக்கு பங்களாதேஷ் நாட்டில் உள்ள Sher-e-Bangla கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது, இறுதியில் பங்களாதேஷ் வெற்றி அடைந்தது.
07 டிசம்பர் 2022: பங்களாதேஷ் Vs இந்தியா - மதியம் 01:30 மணிக்கு Sher-e-Bangla கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது, இறுதியில் பங்களாதேஷ் வெற்றி அடைந்தது. 2024 Parliament: மம்தா பானர்ஜி தலைமையில் ஓரணியாக திரளும் மூன்றாம் அணி?.. பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகம் என்ன?…!
10 டிசம்பர் 2022: பங்களாதேஷ் Vs இந்தியா - மதியம் 01:30 மணிக்கு Sher-e-Bangla கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
2 டெஸ்ட் தொடர்:
14 டிசம்பர் 2022 முதல் 18 டிசம்பர் 2022: இந்தியா Vs பங்களாதேஷ் டெஸ்ட் தொடர். காலை 10:30 மணிக்கு சாகுர் அமீது சவுதாரி கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
22 டிசம்பர் 2022 முதல் 26 டிசம்பர் 2022: பங்களாதேஷ் Vs இந்தியா டெஸ்ட் தொடர், காலை 10:30 மணிக்கு Sher-e-Bangla மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் வீரர்கள்: ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ஆர். பண்ட், இஷான் கிஷான், ஷபாஷ் அகமத், அக்சர் படேல், வாஷிங்க்டன் சுந்தர், ஷரத்துள் தாக்குர், முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், தீபக் சாகர், குல்தீப் சென்.