அக்டோபர் 09, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 2ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது வரை ஒன்பது போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.
இந்தியா எதிர் தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் (India - South Africa Women's Cricket Match):
இதில் பத்தாவது போட்டியில் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) மோதுகின்றன. இந்த போட்டி அக்டோபர் 09-ஆம் தேதியான இன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் காணலாம். முன்னதாக கடந்த அக்டோபர் 05-ஆம் தேதி இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி அடைந்தது. India Women Vs South Africa Women: இந்தியா - தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி.. முழு விபரம் உள்ளே.!
இந்திய தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி மோதல் (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team):
இந்நிலையில் இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி (India Women's Cricket Vs South Africa Women's Cricket) மோதும் ஆட்டத்தில் வானிலை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு தொடர் வெற்றிகளுக்கு பின்னர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ள நிலையில், இந்த போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டி என்பதால் ரசிகர்களும் ஆரவாரத்தில் இருக்கின்றனர்.
வானிலை நிலவரம்:
விசாகப்பட்டினத்தை பொறுத்தவரையில் ஆட்டம் நடைபெறும் போது மழை பெய்ய 75% வாய்ப்புள்ளது. கடுமையான மேகமூட்டமும் நிலவலாம். மோசமான வானிலை காரணமாக போட்டி சில நிமிடங்கள் அல்லது மணி நேரம் வரை நிறுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினம் மைதானம் பேட்டிங் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும். அதே நேரத்தில் சுழற்பந்துவீச்சாளர்களும் முக்கிய பங்கு வகிக்கலாம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் வெற்றி வாகை சூடப்போவது யார்? (India Vs South Africa Women's Cricket Winning Prediction):
அதேபோல இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி இடையே நடைபெறும் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணியும் சமமான அளவு திறனுடன் இருப்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 India Vs South Africa):
போட்டி அணிகள்: இந்தியா W Vs தென்னாப்பிரிக்கா W (India Women's Vs South Africa Women's Cricket)
நடைபெறும் இடம்: ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம்
போட்டி முறை: 50 ஓவர்கள்
போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி
நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)